Wednesday, September 6, 2017

மருத்துவ மாணவர்களுக்கு ’பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு

மருத்துவர்களை தொடர்ந்து முதுகலை மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கும், பயோமெட்ரிக் வருகை பதிவை அமல்படுத்த, கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

டாக்டர்கள் வருகைப்பதிவை முறைப்படுத்த, அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகை பதிவை ஏற்படுத்த முயற்சி செய்தது. ஆனால் அரசு டாக்டர்கள் சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவை முறைப்படுத்த, ஆவணங்களை பாதுகாக்க, கிதப்பயன்பாட்டை குறைக்க, பயோமெட்ரிக் முறை அமல் படுத்தப்பட்டது.

மருத்துவமனையின் டீன், ஆர்.எம்.ஓ., அலுவலகம், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், இதற்கான கருவி பொருத்தப்பட்டது. மருத்துவர்களை அடுத்து, தற்போது முதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கும், பயோமெட்ரிக் வருகைப்பதிவை அமல்படுத்த, மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில், ”மாணவர்களை கண்காணிக்க, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் பணி நேரத்தை ஒதுக்கிடவும், இம்முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மருத்துவமனையில், 400 முதுகலை, பயிற்சி மருத்துவ மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்.

மாணவர்கள் ’ஷிப்ட்’ முறையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணி முறையை வரன்முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் பயோமெட்ரிக் உதவும்,” என்றார்.

No comments:

Post a Comment